மீண்டும் சபைக்குள் குழப்பம்:

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்ப நிலைமை தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு நியமிக்கப்பட்ட நாடாளுமன்றக் குழு, இன்று கூடவுள்ளது.

மேற்படி குழு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் நடத்த   சபாநாயகர் கருஜயசூரிய நியமித்துள்ளார்.

ஊடக நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட ஒளிநாடா காட்சிகள் தொடர்பாகவும் ஆராய்வதற்காக, நாடாளுமன்ற பணியாளர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது தவறென, உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவை அடுத்து சபையமர்வு நவம்பர் 14 ஆம் திகதி கூடியது. அன்றிலிருந்து 16 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக சபைக்குள் நடந்த வன்முறை சம்பவங்களும் கூறிப்பிடதக்க  விடையமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: