தமிழ்லீடர்

முல்லைத்தீவு ஊடகவியலாளருக்கு ஏற்பட்ட பரிதாபநிலை!!!

முல்லைத்தீவு கரைச்சிக்குடியிருப்பில் அமைந்துள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீடு உடைத்து கமரா மற்றும் மடிக்கணணிகள் களவாடப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

மேற்படி முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தின் உறுப்பினரும் சிறந்த ஊடக படப்பிடிப்பாளரும் செய்தியாளருமான கே.குமணன் என்பவரின் வீட்டில் 12.03.19 அன்று பகல் வேளை வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த பெறுமதியான இரண்டு கமராக்கள் மற்றும் மடிக்கணனி என்பன திருடப்பட்டுள்ளன.

எனினும் இந்த கொள்ளைச்சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது பொலிசார் புலன் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பொருளாதாரம் நலிவுற்ற நிலையிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து நாளாந்தம் நடக்கும் நிகழ்வுகளை ஊடகங்களுக்கு வெளிக்கொணர்ந்து ஊடக சேவையினை செய்துவந்த ஊடகவியலாளருக்கு மேலும் பின்னடைவினை ஏற்படுத்தும் முகமாக இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: