தமிழ்லீடர்

மைத்திரி மற்றும் கோட்டபாய ஆகியோரைக் கொலை செய்வதற்கான சதித்திட்டம் தொடர்பில் வாக்குமூலம் பெறப்பட்டது.

அரசியல் பிரமுகர்கள் கொலை அச்சுறுத்தல் தொடர்பில் வாக்குமூலம் வழங்க முன்னாள் ஜனாதிபதியின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ மற்றும் சசி வீரவன்ஸ ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் நாமல் குமாரவால் வெளிப்படுத்தப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோரைக் கொலை செய்வதற்கான சதித்திட்டம் தொடர்பில் வாக்குமூலம் பெறவே இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: