தமிழ்லீடர்

மோட்டார் சைக்கிள் விபத்து ஒருவர் பலி!

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளத்தில் நேற்று மாலை  இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒரு இளைஞர் உயிரிழப்பு, ஒருவர் பலத்த காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் கிரான்குளத்து வளைவில் மோட்டர் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து நிறுத்திவைக்கப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டியுடனும், மோட்டார் சைக்கிளுடனும் மோதி பின்னர் வேலிக்கு நடப்பட்டிருந்த  கொங்கிறீட் தூண்களையும், உடைத்துக்கொண்டு சென்றது.

இதன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டியும், மோட்டர் சைக்கிளும் பலத்த சேதம் என தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து சம்பத்தில் உயிழந்தவர், மற்றும் காயமடைந்தவர், கிரான்குளத்தைச் சேர்ந்தவர்கள் எனவும்,
இருவரும்  உறவினர்கள் எனவும், குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்கள்.                       

Add comment

Recent Posts

%d bloggers like this: