தமிழ்லீடர்

யாழிலில் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!!!

யாழிலில் போதைப் பொருள் குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.மேற்படி யாழ்.மண்கும்பான் பகுதியில் குறித்த இளைஞனின் வீட்டில் இருந்தே போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் மண்கும்பான் பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் வீட்டில் ஹெரோயின்போதை பொருளை வைத்திருப்பதாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, குறித்த நபரின் வீட்டுக்கு சென்ற பொலிஸார் நபரை கைது செய்து அவரை சோதனையிட்ட போது அவரிடமிருந்து நான்கு சிறு பொதிகளில் அடைக்கப்பட்ட ஹெரோயின் போதைப் பொருளை மீட்டனர்.

எனினும் மீட்கப்பட்ட போதைப் பொருள் 300 மில்லி கிராம் எனவும் , கைது செய்யப்பட்ட நபர் கைது செய்யப்படும் போது போதையில் இருந்தார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: