தமிழ்லீடர்

யாழில் இளைஞன் மீது கத்திக் குத்து தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் சற்று முன்னர் இளைஞர் மீது கொடூரமான முறையில் கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மராட்சி மட்டுவில் பகுதியைச் சேர்ந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞன் மீதே தாக்குல் நடத்தப்பட்டதாகவும்,
உடலில் பாரிய காயங்கள் ஏற்படும் வகையில் கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும்,
அவர் ஆபத்தான கட்டத்திலுள்ளமையினால் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.                   

Add comment

Recent Posts

%d bloggers like this: