தமிழ்லீடர்

யாழில் கொள்ளையிட்ட இளைஞரை மக்கள் கட்டி வைத்து அடித்தனர்!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்குள் நின்ற பெண்ணின் 7 பவுன் தாலிக் கொடி அறுத்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞன் கைது செய்யப்பட்டார்.

மேற்படி 7 பவுண் தாலிக் கொடியை அறுத்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரை பயணிகள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்றுறைக்குப் பயணிப்பதற்காக இ.போ.ச பேரூந்தில் ஏறிக் காத்திருந்த பெண்ணின் தாலிக்கொடியை அறுத்துக் கொண்டு, பேருந்தில் இருந்து குதித்துத் தப்பி ஓடியவரை முச்சக்கர வண்டிச் சாரதிகள் மற்றும் பயணிகள் பலரும் விரட்டிச் சென்றனர்.

குறித்த இளைஞன் வெலிங்டன் சந்தியில் மடக்கிப் பிடிக்கப்பட்டார். அவ்வாறு பிடிக்கப்பட்ட இளைஞனை பேருந்து நிலையத்தில் கட்டி வைத்தனர்.இளைஞனிடம் இருந்து அறுத்தெடுக்கப்பட்ட தாலிக்கொடியும் மீட்டெடுக்கப்பட்டது.அதன் பின்னர் இளைஞன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: