தமிழ்லீடர்

யாழில் பட்டப்பகலில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்; கலக்கத்தில் மக்கள்;

யாழ். நல்லூர் நாயன்மார்கட்டு, நாயன்மார் வீதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும்,
முகங்களை மூடிக் கட்டியவாறு வாள்களுடன் வந்த 6 பேர் கொண்ட குழுவினர் குறித்த தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, வீட்டில் நிறுத்தி வைத்திருந்த ஹையஸ் வாகனம் முற்றாக எரிந்துள்ளதாகவும், வீட்டில் இருந்த மூன்று மோட்டார் சைக்கிள், வீட்டுக் கண்ணாடிகள் என்பன உடைத்து நாசமாக்கப்பட்டுள்ளது.

வீட்டின் கேற் பூட்டப்பட்டிருந்த நிலையில், மதிலால் வீட்டுக்குள் ஏறிப் பாய்ந்து உள்சென்ற குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெற்றோல் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பில் எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்கள்.

இவ்வாறான தாக்குதல்களின் மூலம் அதிக மக்கள் பாதிக்கப்படுகின்ற போதிலும், இச்சம்பவங்கள் தொடர்பில் எந்த சட்ட நடவடிக்கையோ அல்லது பொலிஸார் தலையிடுவதோ இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.                       

Add comment

Recent Posts

%d bloggers like this: