யாழில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்! வாகனங்கள் தீக்கிரை!

யாழ்ப்பாணம் கொக்குவில் கருவப்புலம் பிரதேசத்தில் இன்று இரு வீடுகள் மீது பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல், அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ள நிலையில் இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் அடங்கிய குழுவொன்று வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் மற்றும் 2 மோட்டார் சைக்கிள் மீது தீ மூட்டிவிட்டு சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.                             

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: