யாழில் மின்னல் தாக்கத்தில் மூவர் பலி!!!

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேசத்தில் இன்றைய  தினம் மின்னல் தாக்கத்துக்கு உட்பட்டு மூன்று  பேர் பரிதாபகரமாக பலியாகியுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி குறித்த நபர்கள் தமது  புகையிலைத்  தோட்டம் ஒன்றில்  வேலை செய்து கொண்டிருந்துள்ளனர்.இதன் போது திடீரென பெய்த மழையால்  அருகில் இருந்த தென்னைமரத்துக்கு  கீழ் அமைக்கப்பட்டிருந்த  கொட்டிலில் ஒதுங்கியுள்ளனர்.எனவே இடி மின்னல் தென்னை  மரத்தில் மீது விழுந்ததில் மூன்றுபேரும் சம்பவ  இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

எனவே சம்பத்திற்கு உற்பட்டவர்களில் ஆண்ஒருவரும் இரண்டு பெண்களும் அடங்குவர்.மேலும் இந்தசம்பவத்தில் திருநாவுக்கரசு கண்ணன்(வயது48), கந்தசாமி மைனாவதி(வயது52) மற்றும்ரவிக்குமார் சுதா(வயது38)  ஆகியோரே பலியாகியுள்னர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: