யாழ் பல்கலைகழகத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலிப்பிள்ளை பிரபாகரனின் 64வது பிறந்தநாளான இன்று(26ஆம் திகதி) பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
நேற்று(25ஆம் திகதி)இரவு குறித்த சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன தலைவர் அவர்களின் பல்வேறு சிந்தனைகளை தாங்கிய சுவரொட்டிகள் மற்றும் அவரது புகைப்படம் என்பன அதில் உள்ளடங்குகின்றன.
அத்துடன் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 64 பிறந்த தினத்தை தமிழீழ மக்கள் மற்றும் அன்றி உலகில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் மகிழ்ச்சியாக இனிப்பு பண்டங்கள் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.