தமிழ்லீடர்

யாழ்ப்பாணத்தில் இரண்டு கிணறுகளில் மறைக்கப்படும் உண்மைகள்.

யாழ்ப்பாணம் மண்டைதீவில் இரண்டு கிணறுகளில் மனித எச்சங்கள் உள்ளமை குறித்து எழுத்து மூலமான தகவல் வழங்கப்படுமாயின், காணாமல்போனோர் தொடர்பான பணியகத்தின் ஊடாக அது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் குறித்த விடயம் தொடர்பில் சபையில் தகவல் வெளியிட்டார். 

இதன்போது அதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட அமைச்சர் மனோ கணேசன், தமது அமைச்சின் கீழ் இயங்கும் காணாமல்போனோர் அலுவலகத்தின் ஊடாக விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க முடியும் என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அதற்கான தகவல்களை வழங்குமாறும் கோரினார். 

இதற்குப் பதில் வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், குறித்த விடயம் தொடர்பான தகவல்களை அமைச்சருக்கு எழுத்துமூலமாக வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: