யாழ்ப்பாணத்தில் ஐந்து சந்திப்பகுதியில் கால்நடைகளை திருடியவர்கள் கைது.

யாழ்ப்பாணம் ஜந்து சந்தி பகுதியில் உள்ள வீடு ஒன்றுடன் இணைந்து மாடு அறுக்கும் கொல்கலண் இன்று பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முற்றுகையிடப்பட்டது.

கிடைக்கபெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த வீட்டுடன் இணைந்த கொல்கலண் முற்றுகையிடப்பட்ட போது அங்கு திருடிய மாடுகளை இறைச்சியாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உயர் அதிகாரி ஒருவர் கூறினர்.

திருடப்பட்ட ஆறு மாடுகள் இறைச்சியாக்கிய நிலையில் கைபெற்றப்பட்டதுடன் அங்கிருந்து 150கிலோ இறைச்சியும் பறிமுதல் செய்யப்பட்டது. மிகவும் சுகாதார சீர்கேடான நிலையில் இவை இடம்பெற்று வந்துள்ளதுடன், குறித்த வீட்டில் பட்டியாக கட்டப்பட்ட 8 மாடுகளும் பத்திரமாக மீட்கப்பட்டது.

மேலும் குறித்த கட்டிடத்துடன் இணைந்த இன்னொரு பகுதியில் 80 க்கு அதிகமான செம்மறி ஆடுகள் திருட்டு தனமாக அடைத்து வைக்கப்பட்ட நிலையில் அதுவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைபெற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை கூறுகின்றது.

யாழ்ப்பாணம் தீவக்கப்பகுதி மற்றும் யாழ்ப்பாணத்தினை அண்டிய பகுதிகளில் உள்ள வயல் நிலங்கள் மற்றும் மேய்ச்சல் தரவைகளில் கட்டப்பட்ட கால்நடைகளே இவ்வாறு திருடி இறைச்சியாக்கப்பட்டு வந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த வீட்டினை பொலிஸார் முற்றுகையிட்ட போது அங்கிருந்த முதலாளி தப்பி ஓடிய உள்ள நிலையில் வயது முதிர்ந்த பெரியவரும் அவருடன் இணைந்த சக உதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைபெற்றப்பட்ட மாட்டு இறைச்சியினை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தி அதனை எரியூட்டி அழிப்பதற்குரிய நடவடிக்கையினை யாழ்ப்பாணம் பொலிஸார் முண்ணெடுத்துள்ளனர்.

மேலும் கைதான நபர்களையும் நீதிமன்ற நீதிவான் அவர்களின் வாசஸ்தலத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: