தமிழ்லீடர்

யாழ்ப்பாணத்தில் ஐ.நா அதிகாரியை துப்பாக்கியால் அச்சுறுத்திய இராணுவம்!

யாழ்ப்பாணத்தில் ஐ.நா அதிகாரியை, இலங்கை இராணுவத்தினர் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தியதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பில் உள்ள ஐ.நா அதிகாரிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாகவும்,
தம்மை இலங்கை இராணுவத்தினர் எனக் கூறிய இருவர் , யாழ். மாவட்டத்தில் உள்ள ஐ.நா அதிகாரி வதிவிடத்துக்குள் நுழைந்ததாக தெரிவித்துள்ளார்கள்

அதேவேளை, உள்நுழைந்தவர்களில் ஒருவர் கைத்துப்பாக்கியை வைத்திருந்தாரெனவும், அந்த ஐ.நா அதிகாரி தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டதாக அவர்கள் தெரிவித்ததுடன், அந்த அதிகாரியை அவர்கள் அச்சுறுத்தியதாக, முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, வடக்கில் உள்ள இலங்கை இராணுவத்தினர் தமது படையினர் எவரும் இந்தச் சம்பவத்தில் தொடர்புபடவில்லையென தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் திணைக்களம் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பில், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், ஜனாதிபதியிடம் முறையிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.                       

Add comment

Recent Posts

%d bloggers like this: