தமிழ்லீடர்

யாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

13 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் குறித்த 13 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
12 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் வைத்து இருவரும், அரியாலை பகுதியில் வைத்து ஒரு கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவரும் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் வல்வெட்டித்துறை மற்றும் அரியாலை பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் மற்றும் திருநெல்வேலி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

எழுநிலா

Add comment

Recent Posts

%d bloggers like this: