தமிழ்லீடர்

யாழ்ப்பாண மாவட்டத்தில் மிக கடுமையான குளிர் நிலவியதால் மக்கள் அசௌகரியங்களை எதிர் கொள்கின்றனர்.

இன்று காலை வேளையில் யாழ்ப்பாணத்தில் 18°c வெப்பநிலை நிலவியுள்ளது. அதாவது இலங்கயின் குளிர் மாவட்டம் எனப்படும் நுவரெலியாவின் சாதாரண வெப்பநிலைப் பெறுமானமே யாழ்ப்பாணத்திலும் பதிவாகியுள்ளது.

மேற்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த இரவு மற்றும் காலைப் பொழுதில் மிக கடுமையான குளிர் நிலவியதால் மக்கள் கடுமையான அசௌகரியங்களை எதிர் நோக்கியுள்ளனர்.

மேலும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தில் பின் பனிக்காலம் நிலவிவரும் நிலையில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவிவருகிறது.

அத்துடன் பல பிரதேசங்களிலும் கனத்த பனி மூட்டம் நிலவியதுடன் காலையில் பாடசாலைகள் மற்றும் தொழில்களுக்குச் செல்வோர் சிரமங்களை எதிர்கொண்டுவருவதாக கூறப்பட்டுள்ளது.

இதேவேளை இன்னும் சில நாட்களுக்கு இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இரவிலும் காலையிலும் கனத்த குளிர் நிலவும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: