தமிழ்லீடர்

யுத்தக் குற்றம் இடம்பெறவில்லை!-மஹிந்த ராஜபஷ.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் ஸ்ரீலங்கா மீது முன்வைக்கப்பட்டுள்ள யுத்தக்குற்றசாட்டுகளில் இருந்து படையினரை விடுவிக்க கிடைத்த இரண்டு சந்தர்ப்பங்களை ஸ்ரீலங்கா அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பிரீஸ் குற்றம்சுமத்தியுள்ளார்.

மேற்படி பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறினார்.

மேலும் ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற போரின்போது, இராணுவம் மற்றும் விடுதலை புலிகள் ஆகிய இருதரப்பினரும் யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

எனினும், மக்கள் ஐக்கிய முன்னணியின் 22 ஆவது ஆண்டு மாநாட்டில் கலந்துகொண்டஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்காவில் யுத்தக் குற்றம் இடம்பெறவில்லை என்று உறுதியாக கூறினார். இந்த நிலைப்பாட்டைத்தான் பிரித்தானிய பிரபுக்கள் சபையில் உரையாற்றிய நெஸ்பி பிரபுவும் சாட்சிகளை எடுத்துக்காட்டி ஸ்ரீலங்காவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை என்பதை சர்வதேசத்துக்கு எடுத்துக்கூறியிருந்தார்.

எனினும் முப்படைகளையும் பாதுக்காக்கும் பொறுப்பு ஸ்ரீலங்கா அரசாங்கத்திடமே வழங்கப்பட்டுள்ளது. அது வேறு யாருக்கோ வழங்கப்படவில்லை. எனினும் அதனை பிரித்தானிய பிரபுக்கள் சபையில் நெஸ்பி பிரபு பொறுப்பேற்றிருந்தார்.அவர் வெளியிட்ட கருத்துகளை அடிப்படையாகக்கொண்டு ஸ்ரீலங்கா படைகளின் சார்ப்பில் முன்நிற்க தற்போதைய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. 

எனவே மிகவும் பெறுமதியான அந்த சந்தர்ப்பம் தவறவிடப்பட்டுள்ளது. அத்துடன், அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்ற பின்னர் அமெரிக்கா உலக நாடுகளின் விடயங்களில் தலையிடாது என அரசாங்கத்தின் கொள்கைகளை மாற்றியிருந்தார். அந்த மாற்றத்தை பயன்படுத்திக்கொள்ளவும் ஸ்ரீலங்கா அரசாங்கம் தவறியுள்ளது.

எனினும் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின்போது பிரித்தானிய மற்றும் பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சர்கள் எம்பிலிப்பிட்டியவில் வைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் உடனடியாக யுத்தத்தை நிறுத்துமாறும் யுத்த இடைவேளை வேண்டும் என அழுத்தங்களை பிரயோகித்தனர். 

எனினும், இந்த விடயம் உங்களுக்கு உட்பட்டதல்ல எமது நாட்டின் நலன்களை நாங்களே பார்த்துக்கொள்கின்றோம் என மஹிந்த உறுதியாக கூறிவிட்டார். சற்று சிந்தித்து பாருங்கள் இன்று காணப்படும் அரசாங்கம் அன்று ஆட்சியில் இருந்திருந்தால் எவ்வாறான நிலை ஏற்பட்டிருக்கும்.

இதேவேளை, ஸ்ரீலங்காவின் சுயாதீனத்தை விட்டுகொடுப்பதில்லை என்ற நிலைப்பாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியாக இருந்ததாக தெரிவித்த ஜீ.எல்.பீரீஸ், மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அந்த நிலை ஏற்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: