தமிழ்லீடர்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஊனமுற்றவர்களுக்கு இராணுவத்தினால் உதவிகள்!!!

வன்னி கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா மற்றும் இருணுவ உயர் அதிகாரிகளின் ஆலோசனையில் தமிழ், சிங்கள, முஸ்லிம் இனங்களைச் சேர்ந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்டு ஊனமுற்றவர்களுக்கான சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்வொன்று நேற்று (19.02) வன்னிப்பிராந்திய கட்டளை தலைமையகமான ஜோசப் இராணுவ தலமையகத்தில் இடம்பெற்றது.

மேற்படி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கான சக்கர நாற்காலிகள் மற்றும் கைத்தாங்குபிடிகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தது. இந் நிகழ்வில் 56ஆவது படைப்பிரிவின் படைத்தளபதி மேஜர் ஜெனரல் பிரபாத், தனியார் ஆடை உற்பத்தி நிறுவனம் ஒன்றின் பணிப்பாளர், வன்னிப் பிராந்திய கட்டளை தளபதி மற்றும் தெமடபிடிய என்டியு சிஎஸ்மி போன்ற சிரேஸ்ட அதிகாரிகள், பலரும் விருந்தினர்களாக கலந்து கொண்டு அவயங்களை இழந்த மூவின மக்களுக்குமான தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் வவுனியா, மன்னார், அனுராதபுரம் மற்றும் வெலிஓயா பிரதேசத்தில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள ஊனமுற்றவர்களுக்கான சற்கர நாற்காலிகளும், கைத்தாங்குபிடிகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

லீலன்

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

%d bloggers like this: