தமிழ்லீடர்

யுத்தம் காரணமாக தமிழ்நாடு சென்ற 16 குடும்பங்கள் இலங்கைக்கு வருகை.

அகதிகளுக்கான ஜக்கியநாடுகளின் உயர்ஸ்தானிக அலுவலக உதவியுடன், யுத்தகாலத்தில் தமிழ் நாட்டுக்கு அகதிகளாக சென்றவர்களில், 16 குடும்பங்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுயவிருப்பின் பேரில், 16 குடும்பங்களைக் சேர்ந்த 34 பேர் எயர்லங்கா UL-138, UL -132 மற்றும் UL -122 மூலம் இலங்கைக்கு வருகைதரவுள்ளதாகவும், இவர்களில்  15 ஆண்களும், 19 பெண்களும் உள்ளதாகவும், இவர்கள் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களெனவும், தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வாளிப்பு, வடமாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி குறிப்பிட்டுள்ளார்.

இவர்களுக்கு இலவச பயணச்சீட்டு, ஒன்றிணைத்தல் மானிய கொடுப்பனவாக வயது வந்தவர்களுக்கு 10,000 ரூபாயும், வயது குறைந்தவர்களுக்கு 5,000 ரூபாயும், போக்குவரத்துக் கொடுப்பனவாக 2,500 ரூபாயும், உணவு அல்லாத மானிய கொடுப்பனவாக தனிநபருக்கு 5,000 ரூபாயும், குடும்பத்துக்கு 10,000 ரூபாயும், அகதிகளுக்கான ஜக்கியநாடுகளின் உயர்ஸ்தானிக அலுவலகத்தினால் வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மீள்குடியேற்ற அமைச்சினால் விமான நிலையத்தில் 5,000 ரூபாயும், தற்காலிக கொட்டிலுக்காக 25,000 ரூபாயும், உபகரணங்களுக்கு 3,000 ரூபாயும், காணி துப்பரவு செய்வதற்கு 5,000 ரூபாயும் வழங்கப்படுகிறதெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்,  100,000 அகதிகள் இந்தியாவில் தற்போது உள்ளதாகவும், அவர்களில் 65,000 பேர் அகதி முகாம்களிலும், 35,000 பேர் வெளியிடங்களிலும் வாழ்ந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.                       

Add comment

Recent Posts

%d bloggers like this: