தமிழ்லீடர்

யுவதியொருவரைக் நேற்று கடத்த முயன்ற இளைஞர்களை மடக்கிப்பிடித்த பொதுமக்கள்.

முச்சக்கரவண்டியில் யுவதியொருவரைக் நேற்று கடத்த முயன்ற போது குறித்த யுவதி சத்தமிட்டு கூக்குரல் எழுப்பியவாறு முச்சக்கரவண்டியில் பயணித்ததைக் கண்ட பொதுமக்கள் முச்சக்கரவண்டியிற்கு பின் தொடர்ந்து சென்று இடையில் வழிமறித்து அவ் யுவதியை காப்பாற்றியுள்ளார்கள்.

அவ் யுவதியை கடத்த முற்பட்ட மூன்று இளைஞர்களை மடக்கிப்பிடித்த பொதுமக்கள் பொலிஸிடம் ஒப்படைத்துள்ளனர்.

இச் சம்பவம் நேற்று(01)ஆம் திகதி சனிக்கிழமை காலையில் களுதாவளையில் நடைபெற்றுள்ளது.

களுதாவளை பிள்ளையார் ஆலயத்திற்கு பிள்ளையார் விரதம் பிடிப்பதற்காக வருகைதந்த போரதீவைச் சேர்ந்த யுவதியொருவரை முச்சக்கரவண்டியில் வந்த மூவர் இடையில் வழிமறித்து பலவந்தமாக அவரது வாயைப்பொத்தியவாறு ஏற்றிக்கொண்டு முச்சக்கரவண்டியை வேகமாகப் செலுத்திய இந் நிலையில் குறித்த யுவதி அவர்களின் கையை உதறிவிட்டு பலமாக சத்தமிட்டவாறு கத்தியுள்ளார்.

இதனை அவதானித்த பொதுமக்கள் குறித்த முச்சக்கரவண்டியின் பின் தொடர்ந்து சென்று மடக்கிப்பிடித்துள்ளனர். 

முச்சக்கரவண்டியை பயணித்த சாரதி உட்பட மூன்று இளைஞர்களை களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு அறிவித்து அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதற்கு காரணம் காதல் விவகாரமே என தெரிய வருகிறது

மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

ஆலயத்திற்கு வருகைதந்நத யுவதியை கடத்த முற்பட்டசம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: