தமிழ்லீடர்

ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கமாட்டேன்-ஜனாதிபதி தெரிவிப்பு.

ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார்.

மேற்படி நீதிமன்றின் தீர்ப்புக்கு மதிப்பளிக்கின்றேன். ஆனால் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன். அதில் எந்த மாற்றமும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாளை நாட்டின் பாதுகாப்புக் கருதியே மேற்கண்ட தீர்மானத்தை தான் எடுத்ததாகவும், நாளை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் மஹிந்த தரப்பின் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிந்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்த சந்திப்பின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் உயர் நீதிமன்ற தீர்ப்பை ஜனாதிபதி மதித்து நடப்பாரென நம்புகின்றோம் என முன்னாள் பிரதர் ரணில் விக்கிரமசிங்க தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: