தமிழ்லீடர்

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் புதிய வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்கப் போவதில்லை.

புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க வேண்டுமாயின் எழுத்துமூல வாக்குறுதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வலியுறுத்தியதாக ரெலோவின் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

மேற்படி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் புதிய வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ரெலோ தெரிவித்துள்ளது.

வடமராட்சி கிழக்கில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே எம்.கே.சிவாஜிலிங்கம் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: