தமிழ்லீடர்

றாகமையில் வங்கி இன்று கொள்ளையர்கள் வசம்!!!

றாகமை – குருகுலாவ கிராமிய வங்கியில் முகத்தை மூடிய தலைக்காவசத்துடன் உந்துருளிகளில் வந்த இரண்டு பேர் நுழைந்து கொள்ளையிட்டு சென்றுள்ளனர். இன்று பிற்பகல் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேற்படி வங்கிக்குள் நுழைந்த கொள்ளையர்கள் பணியாளர்களிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி வங்கியில் இருந்த 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: