லிப்ட்டுக்குள் இருந்து சடலம் மீட்பு!

கொழும்பு – கொம்பனித் தெரு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் களியாட்ட விடுதியின் லிப்ட் உடைந்து விழுந்ததில், இளைஞன் ஒருவர் சடலமாக மீட்பு.

இச்சம்பவம்,  நேற்று (29) அதிகாலை 1.50 மணிக்கு இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் பத்தரமுல்ல, தலங்கம பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான கோகில சமந்தபெரும என, பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் இருவர் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக
பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

சம்பவம் தொடர்பில் கொம்பனித் தெரு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக  தெரிவித்துள்ளார்கள்.                       

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: