தமிழ்லீடர்

லொறியுடன் வெடிப்பொருட்கள் மீட்பு!

ஹம்பாந்தோட்டை  கீழ் அந்தரவெவ பகுதியில், அதிசக்திவாய்ந்த  250 கிலோ கிராம் வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

சூரியவெவ விசேட அதிரடிப்படையினரால், குறித்த வெடிப்பொருட்கள் இன்று (15) கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிப்பொருட்கள் அடங்கிய குறித்த லொறியை சோதனையிடுவதற்காக  பொலிஸார் சமிக்ஞையிட அதனை பொருட்படுத்தாது, லொறியை நிறுத்தாமல் வேகமாக செலுத்திச் சென்று, இடைநடுவில் கைவிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கைவிடப்பட்ட குறித்த லொறியை பொலிஸார் சோதனையிட்ட போது இந்த வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.                               

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

%d bloggers like this: