தமிழ்லீடர்

வகுப்பு ஆரம்பித்ததும் குடிபோதையில் வாந்தி எடுத்த மூன்று மாணவர்கள் கைது!

ஹட்டன் பிரதேசத்தில் விகாரையொன்றில் நடத்தப்படும் மேலதிக வகுப்பு ஒன்றில் மதுபானத்தை அருந்திய இம்முறை கல்வி பொதுத்தராதர பத்திர சாதாரண பரீட்சையில் தோற்றவுள்ள மூன்று மாணவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்த மாணவர்கள் மூவரும் மேலதிக வகுப்பு ஆரம்பித்து சில நிமிடங்களில் வாந்தி எடுத்துள்ளதாகவும்,
மேலதிக வகுப்பை நடத்தி சென்ற தேரர் சந்தேகப்பட்டதால், ஹட்டன் காவல்துறைக்கு அறிவித்ததை அடுத்து மூவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்றத்தில் அஜர்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, மாணவர்களுக்கு மதுபானத்தை விற்பனை செய்த மதுபானசாலை முகாமையாளரையும், கைது செய்யவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளார்கள்.                       

Add comment

Recent Posts

%d bloggers like this: