தமிழ்லீடர்

வடமாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் 55 ஆயிரத்திற்கு அதிகமானவர்கள் வெள்ளப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கில் ஆரம்பகட்ட தகவல்களில் 65000 இற்கும் மேற்பட்ட மக்கள் இருப்பிடங்களை இழந்து அவதியுற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்படி வடக்கில் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி தண்ணீரில் தத்தளித்துவருகின்றனர்.

மேலும் வடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டம் வெள்ளம் காரணமாக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அம்மாவட்டத்தில் 55 ஆயிரத்திற்கு அதிகமானவர்கள் வெள்ளப் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லீலன்

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

%d bloggers like this: