தமிழ்லீடர்

வட மாகாணத்தில் கடும் குளிரான காலநிலையினால் மக்கள் பெரும் அசோகரியத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

வடக்கு, வடமத்திய, மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடும் குளிரான காலநிலை தொடர்ந்து காணப்படும் என வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டில் பெரும்பாலான மாகாணங்களில் விசேடமாக மழையற்ற வானிலையே தொடர்ந்து நிலவும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

எனினும் இரத்தினபுரி மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: