தமிழ்லீடர்

வத்தளையிலிருந்து பயணித்த காருக்கு துப்பாக்கி சூடு இருவர் பலி!

நேற்று பகல் வத்தளை- ஹேக்கித்த பிரதேசத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளார்கள்.

கொட்டாஞ்சேனை – ஜெம்பட்டா வீதியைச் சேர்ந்த 33 மற்றும் 28 வயதுடைய இருவரே இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களென பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.

காரில் வத்தளையிலிருந்து நீர்கொழும்புக்கு, சென்றுக்கொண்டிருந்த மூவர் மீது மற்றுமொரு காரில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், இருவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவரில் 33 வயதுடைய நபர் ஸ்டீவன் ராஜேந்திரன் என அடையாளம் காணப்பட்டதுடன்,  மற்றைய நபர் மதி ​என்று  அழைக்கபடுபவரெனவும், குறித்த இருவருடனும் பயணித்த ஸ்டீவன் ராஜேந்திரனின் உறவினர் பெண் வழங்கிய தகவல் மூலம் தெரியவந்தாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் கொட்டாஞ்சேனை- செல்லையா தோட்டத்தில் நடைபெற்று வரும் ஹெரோய்ன் போதை வர்த்தகம் தொடர்பில் இரு குழுவிற்கும் ஏற்பட்ட முரண்பாடே இந்த துப்பாக்கிச் சூட்டுக்குறிய, காரணமாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகிப்பதாக, குறிப்பிடப்பட்டுள்ளது.                       

Add comment

Recent Posts

%d bloggers like this: