தமிழ்லீடர்

வன்னி நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம் விபத்துக்குள்ளாகியது!!!

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் சென்றுகொண்டிருந்த வாகனம் இன்று காலை விபத்திற்குள்ளாகியுள்ளது.

மேற்படி கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த வாகனம் மதவாச்சி புனாவை பகுதியில் வைத்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

மேலும் இதன்போது, வாகனம் சேதமடைந்துள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் மற்றும் அவருடன் பயணித்த பாதுகாப்பு உதவியாளர், ஊடகப்பிரிவு ஊழியர் ஆகியோர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த விபத்துத் தொடர்பான விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: