தமிழ்லீடர்

வர்த்தகர்கள் இருவர் கடத்தப்பட்டு அவர்களுக்கு நேர்ந்த சம்பவத்தால் தென் மாகாண உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது!

ரத்கம பகுதியில் வர்த்தகர்கள் இருவர் கடத்தப்பட்டு காணாமல் போன தொடர்பில் தென் மாகாண விசேட விசாரணைப் பிரிவின் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

26 வயதான விராஜ் மதுஷங்க எனும் உப பொலிஸ் இன்ஸ்பெக்டரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் ஏற்கனவே தென் மாகாண விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிஷாந்த டி சில்வா கைது செய்யப்பட்டடு,  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.

மஞ்சுள அசேல மற்றும் ரஷீன் சிந்தக்க ஆகிய வர்த்தகர்கள் இருவர் கடந்த மாதம் 23 ஆம் திகதி முதல் காணாமல் போன சம்பவம் அன்று பொலிஸ் சீருடையில் வருகை தந்தவர்கள் துப்பாக்கி காட்டி அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்றுள்ளதாக அவரின் குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

காலி உதவி பொலிஸ் அத்தியட்சகர் சதிஸ் கமகேவினால் கடந்த 5 ஆம் திகதி இவர்கள் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், அவ்வாறு எவரையும் கைது செய்யவில்லையென கடந்த 14 ஆம் திகதி தெரிவிக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் உள்ள விசேட பிரிவினரால் குறித்த வர்த்தகர்கள் இருவரும் அழைத்துச் செல்லப்பட்டதாக கடந்த வாரத்தில் அவர்களின் வீட்டிற்குக் கிடைத்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்போது, பொலிஸாரின் தாக்குதலில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்ததாகவும் மற்றைய வர்த்தகர் அதனைக் கண்டதால் அவரையும் கொலை செய்ததாகவும் அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த கடிதத்தை பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் கீழ் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்ட நிலையில்,
தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட உதவி பொலிஸ் மா அதிபர் ரவி விஜேகுணவர்தன கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்புக்கு மாற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கவிடயமாகும்.         

Add comment

Recent Posts

%d bloggers like this: