வர்த்தமானி அறிவித்தல் பற்றிய வழக்கு தீர்ப்பு இன்று 4 மணிக்கு வழங்கப்படவுள்ளது.

வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு பிரதம நீதியரசர் நளின் பெரேரா நீதியரசர்களான சிசிர த ஆப்ரு, புவனேக அலுவிஹார, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, விஸித் மலலகொட, முர்து பெர்னாண்டோ ஆகிய உயர்நீதிமன்ற நீதியர்சர்கள் 7 பேர் கொண்ட குழுவால் விசாரணை செய்யப்பட்டு வந்தது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நாடாளுமன்றம்  கலைக்கப்படுவது தொடர்பில், வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல்  செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு மீதான  தீர்ப்பு இன்று மாலை 4 மணிக்கு வழங்கப்படவுள்ளது.

குறித்த மனு மீதான விசாரணைகள் கடந்த 4ஆம் திகதி தொடக்கம் 7ஆம் திகதி வரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இன்றைய தினம் இதன் தீர்ப்பு வழங்கப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: