தமிழ்லீடர்

வளர்ச்சி அடைந்து வரும் கிளிநொச்சி பிரதேசம்!!!

கிளிநொச்சி கரைச்சி , கண்டாவளை ஆகிய இரண்டு பிரதேச செயலகங்கங்களை உள்ளடக்கிய கரைச்சி பிரதேச சபையின் அபிவிருத்தியை மேம்படுத்துவதற்காக 138 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேற்படி வீதிகள் , பாலங்கள் , கல்வி , மத வழிபாட்டுத்தலங்கள் , விளையாட்டுத் துறை என்பவற்றை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் இத்தகைய நிதி மத்திய அரசினால் ஒதுக்கப்பட்டுள்ளது. 

மேலும் ஊரெழுச்சி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கரைச்சி பிரதேச சபையினால் முன் மொழியப்பட்ட வேலைத்திட்டங்களுக்கு அமைய இந்த நிதி கிடைக்கப்பெற்றுள்ளது.

மேலும் இந்த அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்றது. பிரதேச மட்டத்தில் அந்தந்த பிரதேச செயலாளர் தலைமையிலும் நடைபெற்றிருக்கிறது. 

அத்துடன் பொது அமைப்புகளின் பிரதி நிதிகள் மற்றும் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் , உப தவிசாளர் ஆகியோரும் கலந்துகொண்டு இந்த அபிவிருத்தி திட்டம் நிகழும் காலப்பகுதிகள், தொழில்நுட்ப தராதரங்கள் கடந்த கால வேலைத்திட்டங்களில் கற்றுக்கொண்ட படிப்பினையை வைத்து தரம் வாய்ந்த அபிவிருத்தியை மேற்கொள்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு கரைச்சி பிரதேச சபைக்கு கிடைக்கப்பெற்ற 52 மில்லியன் ரூபாய்க்கு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகள் சிறப்புற நிறைவு பெற்றுள்ள இவ் வேளையில் மீண்டும் 138 மில்லியன் ரூபாய் கரைச்சி பிரதேச சபைக்கு கிடைக்கப் பெற்றிருப்பதன் காரணமாக பல்வேறுவகையான அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்கக்கூடியதாக இருக்கிறது. 

இதற்கான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் வரும் மார்ச் மாத ஆரம்பத்தில் அனைத்து கிராமங்களிலும் கிராம மக்களின் பங்கு பெற்றலில் அபிவிருத்திப்பணிகள் ஆரம்பமாகும் என தவிசாளர் அ.வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: