தமிழ்லீடர்

வவுனியாவில் சட்டவிரோத செயற்பாடு!!!

வவுனியா போகஸ்வௌ குளத்தில் சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுவந்த ஜந்துபேர் வவுனியா மாவட்ட நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் இன்றய தினம் கைதுசெய்யபட்டனர்.

மேலும் இது தொடர்பாக தெரியவருகையில்,வவுனியா போகஸ்வௌ குளத்தில் நீண்டகாலமாக சட்டவிரோதமான முறையில் தங்கூசி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் தேசிய நீர் உயிரின வளர்ப்பு அதிகாரசபையின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி நிசாந்தன் யோகநாதன் தலைமையிலான உத்தியோகத்தர்கள் மற்றும் மடுகந்தை விசேட அதிரடிப்படையினர் சகிதம் இன்று காலை குறித்த பகுதியில் தேடுதலில் ஈடுபட்டனர்.

இதன்போதே சட்டவிரோதமான முறையில் தடைசெய்யபட்ட வலைகளை உடமையில் வைத்திருந்தனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஐந்து பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 75 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கூசி வலைகளும் மீட்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் கைது செய்யப்பட்ட ஐவருக்கும் சரீரப்பிணை வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 28 ம் திகதி வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளையும் நீர் உயிரின வளர்ப்பு அதிகாரசபை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: