தமிழ்லீடர்

வவுனியாவில் சாரதியின் கட்டுப்பாட்டை மீறி கயஸ்ரக வாகனம் விபத்து!!!

வவுனியா தாண்டிக்குளத்தில் இன்று அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்ற வாகனவிபத்தில் சாரதி உட்பட எட்டு பேர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி கச்சதீவு ஆலயத்தின் திருவிழாவிற்குசென்றுவிட்டு சிலாபம் நோக்கி பயணித்த கயஸ்ரக வாகனம் வவுனியா கொக்குவெளி ராணுவமுகாமிற்கு முன்பாக சென்றுகொண்டிருந்தபோது சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து அருகில் இருந்த மரத்துடன் மோதியலதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

எனவே விபத்தில் காயமடைந்தவர்கள் பொதுமக்களின் உதவிடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்துச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: