வவுனியா, சிதம்பரபுரம் – கற்குளம் பகுதியில் இருந்து நேற்று மாலை தனது பாட்டியுடன் சென்ற சிவானந்தம் தருண் என்ற ஆறு வயது சிறுவன் இன்று காலை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை சுந்தரபுரத்திலிருந்து சிதம்பரபுரம் கற்குளம் படிவம் 3 பகுதிக்கு, தொண்ணூறாம் நாள் நினைவஞ்சலிக்கு முன் ஆயத்த வேலைக்காக குறித்த சிறுவன் தனது பாட்டியுடன் சென்றுள்ளாரெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்,அங்கு ஏனைய சிறுவர்களுடன் விளையாடி கொண்டிருந்த சிறுவன் இரவாகியும் வராததால், சிறுவனை எல்லா இடமும் தேடியதாகவும், இதனையடுத்து இன்று கிணற்றில் இருந்து சிறுவன் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவித்தனர்.
குறித்த கிணறு முழுமையாக நிர்மானிக்கப்பட்டுள்ளதுடன், கிணற்றின் கட்டு 3 அடிக்கு உயற்றப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான கிணற்றில் பிள்ளை எவ்வாறு வீழ்ந்திருக்க கூடும். இது கொலையா? அல்லது பழிவாங்கும் நோக்கில் செய்யப்பட்டதா? பல்வேறு கோணங்களில் செய்தியாளரும், பொலிஸாரும் மிகவும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.