தமிழ்லீடர்

வவுனியாவில் வாள்வெட்டு தாக்குதல்!!!இருவர் படுகாயம்!!!

வவுனியா ஓமந்தை சேமமடு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளனனர்.மேற்படி நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஓமந்தை சேமமடு பகுதியில் வயல் காவலுக்காக இருந்த இருவர் மீது அவ்விடத்திற்கு வந்த இனந்தெரியாத நபர்கள் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். எனினும் இதனையடுத்து ஓமந்தை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், படுகாயமடைந்த இருவரையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும் இந்த தாக்குதல் காரணமாக வசந்தகுமார் வயது – 37, கருணாகரன் வயது – 33 ஆகிய இருவருமே படுகாயத்துக்கு உள்ளாகியுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: