தமிழ்லீடர்

வவுனியாவில் வெடிக்காத இரு மோட்டார் குண்டுகள் மீட்பு!!!

வவுனியா நெடுங்கேணியில் நேற்று மாலை விறகு வெட்ட காட்டுக்குச் சென்ற இருவர் வெடிக்காத நிலையில் இரண்டு மோட்டார் குண்டுகளை அவதானித்துள்ளனர்.

எனவே இதையடுத்து நெடுங்கேணி பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு அக் குண்டுகளை செயலிழப்புச் செய்வதற்கு விஷேட அதிரடிப்படையினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி நேற்று மாலை 4 மணியளவில் நெடுங்கேணி ஜயனார் கோவிலுக்கு பின்புறமுள்ள காட்டுப்பகுதிக்கு இருவர் விறகு வெட்டுவதற்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் மரம் ஒன்றில் இறுகிய நிலையில் இரண்டு மோட்டார் குண்டுகள் வெடிக்காத நிலையில் காணப்பட்டுள்ளது. 

எனவே நெடுங்கேணிப் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் புளியங்குளம் விஷேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

எனினும் இன்றைய தினம் நீதிமன்ற அனுமதியைப் பெற்று இரண்டு குண்டுகளையும் செயலிழப்புச் செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: