வவுனியா நெடுங்கேணியில் சிறுவன் மரணம்!!!

வவுனியா நெடுங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதிரம்பிட்டி பகுதியில் கிணற்றிலிருந்து சிறுவனின் சடலம் ஒன்று நேற்றயதினம் மீட்கபட்டுள்ளது.

மேற்படி குறித்த சிறுவனின் பெற்றோர் வெளியில் சென்ற நிலையில் தனது சகோதரனுடன் கிணற்றிற்கு அண்மையில் விளையாடிக்கொண்டிருந்த பொழுது தவறுதலாக உள்ளேவிழுந்திருக்கலாம் என நெடுங்கேணி போலிசார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவத்தில் முதிரம்பிட்டி பகுதியை சேர்ந்த சிவலிங்கம் அலெக்சன் (வயது 7 )என்ற சிறுவனே சாவடைந்துள்ளார். சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கபட்டுள்ளது. 

மேலதிக சம்பவம் தொடர்பாக நெடுங்கேணி போலிசார் விரசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்தவாரமும் வவுனியா கற்குளம் பகுதியில் 4 வயதுசிறுவன் ஒருவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: