தமிழ்லீடர்

விடுதலைப்புலிகளின் தங்கத்தை தேடியவர்களுக்கு கிடைத்த பரிசு!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் முதன்மை வீதியின் அருகில் விடுதலைப்புலிகள் காலத்தில் தங்கம் புதைத்து வைத்ததாக கூறப்பட்ட வீ்ட்டின் அறை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக தோண்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கிருத்து போர் நடைபெற்ற காலத்தின் மக்கள் மற்றும் விடுதலைப்புலிகளின் தடயங்கள் மட்டுமே காணப்பட்டதாகவும், 2011 ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட ஒரு ரூபா நாணயக்குத்தி ஒன்று மட்டுமே மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவுப் பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர், தொல்பொருள் திணைக்களத்தினர் மற்றும் நீதிமன்ற அதிகாரிகள் என அனைவரும் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.                                   

Add comment

Recent Posts

%d bloggers like this: