தமிழ்லீடர்

விடுதலைப் புலிகளின் உடமைகள் மீட்டதைடுத்து பொலிஸாரின் தீவிர நடவடிக்கை!

அனுராதபுரம் தகயாகம பகுதியில் விடுதலைப் புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியும், துப்பாக்கி ரவைகளும், மீட்கப்பட்டதாக அனுராதபுரம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அனுராதபுரம் தகயாகம, ஜெயசிங்க பகுதியில் நேற்று மாலை 4 மணியளவில் மாநகரசபையினர் வீதியோரங்களை துப்பரவு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ள போது துப்பாக்கி ரவைகள் வீதியோரத்திலுள்ள வடிகானில் பை ஒன்றில் வைக்கப்பட்டுள்ள நிலையில் காணப்பட்டதாகவும்,
இது குறித்து பொலிஸாருக்கு தகவலை அறிவித்ததும், அனுராதபுரம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து உடமைகளை மீட்டுள்ளார்கள்.

அதேவேளை, மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் -46 எம்.பி.எம்.ஜி துப்பாக்கியுடையெது எனவும், விடுதலைப்புலிகளின் சின்னதுடனான தொப்பி புதிதாக இருப்பதாகவும், தெரிவித்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.                             

Add comment

Recent Posts

%d bloggers like this: