தமிழ்லீடர்

விடுதலைப் புலிகளின் தொப்பியொன்று தொடர்பிலான வழக்கு விசாரிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தொப்பியொன்று கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாராஹேன்பிட்டியில் இருந்து லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது கடந்த ஏப்ரல் மாதம் விடுதலைப் புலி இயக்கத்தின் உயர்மட்ட உறுப்பினர்கள் பயன்படுத்திய தொப்பியொன்று கண்டுபிடிக்கப்பட்டதாக குறிப்பிடப்ட்டுள்ளது.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களும் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, வழக்கை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் எடுத்து நடத்துவதற்கு நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்த போதிலும், பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் அதற்கு மறுப்பு தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கமைய, இம்மாதம் 18 ஆம் திகதி வரை இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், சந்தேகநபர்கள் இருவரும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகள் 16 பேர் கொழும்பு நீதவான் அருனி ஆட்டிகல முன்னிலையில் இன்று மீண்டும் சிறைச்சாலை அதிகாரிகளால் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும்,
கைதிகள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தல்கள் வரும் வரை அவர்களை விளக்கமறியலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, 16 தமிழ் அரசியல் கைதிகளின் விளக்கமறியல் 18 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ள விடயம் குறிப்பிடத்தக்கது.                               

 

Add comment

Recent Posts

%d bloggers like this: