தமிழ்லீடர்

விமர்சிப்பதைத் தவிர வேறுதிட்டம் ஒன்றுமில்லாத கஜேந்திரகுமார் – சித்தாத்தன்

கஜேந்திரகுமார் எம்மை பலரையும் தொடர்ந்தும் விமர்சித்துக் கொண்டிருக்கின்றார். ஆனால், அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை இன்னும் மக்களுக்குச் சொல்லவில்லை. முதலில் தன்னுடைய நிலைப்பாட்டை அவர் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். ஒன்றுமே செய்யாமல், மற்றயவர்களை விமர்சித்துக் கொண்டிருப்பதால் மட்டும், தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுக் கொடுக்கலாம் என்றோ, தன்னுடைய அரசியலை முன்னெடுக்கலாமென்றோ அவர் நினைக்கக் கூடாது என புளொட் கட்சியின் தலைவர் சித்தாத்தன் அவர்கள் தனது வாசஸ்தலத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது  தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைமைகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளிற்கு இந்த சந்திப்பில் பதிலளித்தார்.

தமிழ் மக்கள் பேரவையிலிருந்து புளொட் வெளியேற்றப்பட வேண்டும் என்றும், ஏனைய கட்சிகள் அனைத்தையும் துரோகிகள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி குறிப்பிட்டு வருவது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் மக்கள் பேரவையில் நாங்கள் உட்பட பல கட்சிகளும் பொது அமைப்புக்களும் அங்கம் வகிக்கின்றன. அதே போன்று கஜேந்திரகுமாரின் கட்சியும் அங்கம் வகிக்கின்றன. எங்களை வெளியேற்றுமாறு கஜேந்திரகுமார் கூறியுள்ளதாக அறிந்தோம். ஆனால், வெளியேறுமாறு பேரவையைச் சேர்ந்த யாரும் எங்களுக்கு சொல்லவில்லை.

பேரவையின் எழுக தமிழ் நிகழ்வு உள்ளிட்ட அனைத்துச் செயற்பாடுகளிலும் நாங்கள் ஆதரவு அளித்திருக்கின்றோம். எம்மைப் போன்று சுரேஸ் பிறேமச்சந்திரனின் பங்கும் அளப்பரியது. ஆகவே பேரவை என்பது தனியே ஒரு கட்சியல்ல. அது பல கட்சிகள் பொது அமைப்புக்கள் இணைந்த கூட்டு ஆகும். ஆகவே அது ஒருவருக்கோ அல்லது ஒரு கட்சிக்கோ சொந்தமானது அல்ல.

கஜேந்திரகுமார் தான் எம்மை வெளியேற்றுமாறு கோரியிருக்கின்றார். அவர் ஒரு சின்னப் பொடியன். அவரின் கருத்துக்களை சீரியசாக எடுக்கத் தேவையில்லை.

கஜேந்திரகுமார் எம்மை பலரையும் தொடர்ந்தும் விமர்சித்துக் கொண்டிருக்கின்றார். ஆனால், அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை இன்னும் மக்களுக்குச் சொல்லவில்லை. முதலில் தன்னுடைய நிலைப்பாட்டை அவர் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். ஒன்றுமே செய்யாமல், மற்றயவர்களை விமர்சித்துக் கொண்டிருப்பதால் மட்டும், தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுக் கொடுக்கலாம் என்றோ, தன்னுடைய அரசியலை முன்னெடுக்கலாமென்றோ அவர் நினைக்கக் கூடாது.

தமிழ் மக்களுக்கு அவர் என்ன செய்யப் போகின்றார்?. அகிம்சை ரீதியாக அல்லது ஆயுத ரீதியாகப் போராடப் போகிறாரா? அல்லது இதனையெல்லாம் விடுத்து தொடர்ந்தும் மற்றவர்களை விமர்சித்துக் கொண்டு மட்டுமே இருக்கப் போகின்றாரா என்பதற்குப் பதிலளிக்க வேண்டும்.

கூட்டமைப்பிற்கு மக்கள் வாக்களித்துள்ளதை போல, அவரது கட்சிக்கும் வாக்களித்திருக்கின்றனர். ஆகவே வாக்களித்த மக்களுக்காவது தாம் என்ன செய்யப் போகின்றார் என்பதைப் பற்றி எதையும் கூறாமல், தொடர்ந்தும் மற்றவர்கள் என்ன செய்கின்றார்கள், ஏன் அவ்வாறு செய்கின்றார்கள் என விமர்சித்துக் கொண்டு இருக்கப் போகிறாரா?

தொடர்ந்தும் மற்றவர்களை விமர்சித்துக் கொண்டு தான் இருக்கப் போகிறார் என்றால் அது அவருடைய எதிர்காலத்திற்கு நல்லதல்ல. எனவே, தான் என்ன செய்யப் போகின்றார் என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்திவிட்டு அதனை அடைவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்“ என்றார்.

Add comment

Recent Posts

%d bloggers like this: