தமிழ்லீடர்

வியாழேந்திரனை கட்சியில் இருந்து நீக்குமா புளொட்?

ஜனாதிபதியினால் கிழக்கு பிராந்திய அபிவிருத்தியினுடைய பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்ட இருக்கின்ற வியாழேந்திரனுக்கு எதிராக அவர் சார்ந்திருக்கின்ற கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க உள்ளதாக அந்தக் கட்சியை மேற்கோள்காட்டி செய்தி கிடைக்கப்பெற்றிருக்கிறது.

தற்போது இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற அரசியல் அசாதாரண சூழ்நிலையை தமது இனத்திற்கு சாதகமாக பயன்படுத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற நிலையிலே தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடைய ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அந்தக் கட்சிக்கு தெரியாமல் அனுமதியில்லாமல் பிரதி அமைச்சர் பொறுப்பினை ஏற்று இருப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என புளொட்அமைப்பினை மேற்கோள்காட்டி செய்தி கிடைக்கப் பெற்றிருக்கிறது இதுதொடர்பாக அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் ஆகிய இரா சம்பந்தன் அவர்களுக்கு அறிவிக்க உள்ளதாக புளொட் அமைப்பின் மத்திய செயற்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்

நாரதர்

Add comment

Recent Posts

%d bloggers like this: