தமிழ்லீடர்

விரைவில் யாழ்ப்பாணம் – கொழும்பு புகையிரத சேவை ஆரம்பம்.

இலங்கை புகையிரத திணைக்களம் இந்தியாவிடம் வாங்கிய புதிய S13 ரயில் நேற்று இரண்டாம் தடவையாக பரீட்சார்த்த பயணமாக கொழும்பு மருதானை ரயில் நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் ரயில் நிலையத்துக்கு வருகை தந்தது.

இதில் இந்திய ரயில் அதிகாரிகள் இலங்கை புகையிரத திணைக்கள அதிகாரிகளும் வருகை தந்தனர்.நேற்று பிற்பகல் 2 மணியளவில் யாழ்ப்பாணம் வருகை தந்த ரயில் காங்கேசன்துறை ரயில் நிலையம் வரை பயணித்து சில மணித்தியாலங்களில் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை வந்தடைந்தது.

இன்றைய தினம் மதியம் மீண்டும் கொழும்பு நோக்கி செல்லவுள்ளது.விரைவில் யாழ்ப்பாணம் – கொழும்பு உத்தரவேவி ரயில் சேவையாக இயங்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: