தமிழ்லீடர்

வில்பத்து வனப்பகுதியில் ஓர் அங்குலத்தையேனும் யாருக்கும் வழங்கப்போவதில்லை

வில்பத்து வனப்பகுதியில் ஓர் அங்குலத்தையேனும் யாருக்கும் வழங்கப்போவதில்லையென வனப்பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஜோன் அமரதுங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

வனப்பகுதியை நான் பொறுப்பேற்றதன் பின்னர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், குறித்த பகுதியை முஸ்லிம்களுக்காக விடுவித்துத் தருமாறு கேட்கவில்லையெனவும் ஜோன் அமரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் வில்பத்து விவகாரத்தில் ரிஷாட் பதியுதீனை குற்றம் சுமத்துவது உகந்ததல்லவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில் வில்பத்து வனப்பகுதியினை யாரும் உரிமை கொண்டாட முடியாதெனவும் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

எழுநிலா

Add comment

Recent Posts

%d bloggers like this: