தமிழ்லீடர்

வீட்டில் இருந்த மாணவிக்கு நேர்ந்த விபரீதம்!

வவுனியா – மடுக்கந்தை, மயிலங்குளம் பகுதியிலுள்ள வீட்டில் இன்று மதியம் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 16 வயது பாடசாலை மாணவி படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் குறித்த மாணவி சமைப்பதற்காக சமையலறைக்கு சென்று அடுப்பினை உபயோகித்த போது எரிவாயு சிலிண்டர் வெடித்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தின் பின் பாதிக்கப்பட்ட மாணவி உடனடியாக அயலவர்களால் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

மாணவி தற்போது அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், வைத்தியசாலை உழியர்கள் தகவல் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.                             

Add comment

Recent Posts

%d bloggers like this: