வீட்டுக்குள் நுழைந்த இருவர் உறங்கிக்கொண்டிருந்த தாய், மகள் மீது அசிட் வீச்சு!!

நேற்று இரவு 10.30 மணியளவில், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தாய் மற்றும் அவரது மகள் மீது, வீட்டுக்குள் நுழைந்துள்ள இருவர், அசிட் வீசிவிட்டுத் தப்பிச்சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கம்புறுபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரத்கெக்குலாவ, போலகெவத்த, அமல்கா இல்லம் என்ற வீட்டிலிருந்தவர்கள் மீது இவ்வாறு அசிட் வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் இருவரும் எரிகாயங்களுடன், ஆந்தபான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக, மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த பிரதாபசிங்க ஆரச்சியே விஜித்தா என்ற 39 வயதுத் தாய், உயிரிழந்துள்ளாரென குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உயிரிழந்தவரின் கணவர், கடந்த 5 மாதகாலமாக, மனைவி, மகளைப் பிரிந்திருந்த நிலையில், நேற்றிரவு, மற்றுமொரு நபருடன் வந்து, தங்கள் மீது அசிட் வீசியதாக, குறித்த நபரின் மகள், பொலிஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது.                               

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: