வீதிகளிலுள்ள விளம்பரப் பலகைகளை அகற்றுமாறு ஆளுநர் மாநகர சபைக்கு அறிவிப்பு.

வாகனம் செலுத்துவோருக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், வீதிகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் விளம்பரப்பலகைகளை உடனடியாக அகற்றுமாறு, மேல் மாகாண ஆளுநர்                        எஸ். அசாத்  சாலி  கொழும்பு மாநகர சபைக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

விளம்பரப்பலகைகள் வாகனம் செலுத்துவோருக்கு  இடையூறு விளைவிப்பதாகவும், வீதி விபத்துக்கள் ஏற்படுவதற்கும் காரணமாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகரசபை
ஆணையாளர் வீ. ஏ. கே. அனுர, விளம்பரப்படுத்தல் திணைக்களத்தின் உறுப்பினர்களும் அவரது அலுவலகத்தில் சந்தித்த போதே  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், மின்கம்பங்களில் விளம்பரங்களை காட்சிப்படுத்துவது முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும், எனவும் அவர் தெரிவித்துள்ளார்.                   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: