வீதியில் பயணித்த முதியவர் பரிதாபமாக உயிரிழப்பு!!!

மட்டக்களப்புகாத்தான்குடி,கிரான்குளத்தில்  இடம்பெற்ற வான் விபத்தில் முதியவர் ஒருவர்  உயிரிழந்துள்ளார்.மேற்படி கிரான்குளம் பிரதான  வீதியில் பயணித்த துவிச்சக்கரவண்டி மீது  வேகமாக வந்த வான் ஒன்று மோதியதாலேயே  குறித்த விபத்து சம்பவித்துள்ளது.அத்துடன்  வானின் சாரதி பொலிஸாரால் கைது  செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இவ் விபத்தில் கிரான்குளம், தர்மபுரத்தைச் சேர்ந்த 62வயதுடைய ஆறுமுகம் செல்லப்பா என்ற முதியவரே உயிரிழந்துள்ளார்.எனவே உயிரிழந்தவரின் சடலம் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: